Map Graph

தருமாபுரி நகராட்சி வார்டு

புதுச்சேரியில் உள்ள ஊர்

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் இருக்கும் புதுச்சேரி மாவட்டத்தில், வடக்கு வருவாய்க் கோட்டத்தில் இருக்கும் உழவர்கரை வட்டத்தில் இருக்கும் தட்டாஞ்சாவடி வருவாய் கிராமத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும். மேலும் உழவர்கரை நகராட்சி கீழ் வரும் நகராட்சி வார்டுகளில் ஒன்று ஆகும் இவ்வூரில் ஒரு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, அரசு ஆரம்பப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு அங்கன்வாடி மையம், அரசு நியாய விலைக் கடை உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இவ்வூரில் கால்நடைச் சந்தை நடப்பது வழக்கமாகும். 1973-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரம் இயக்ககம் நடத்திய திட்ட அரசியின் மூலம் ஒவ்வொரு வாரமும் 300 கால்நடை சந்தைப்படுத்தப்படுகிறது என்பது அறியப்பட்டது.இந்த சந்தைக்கு புதுச்சேரி பகுதியில் உள்ள 42 கிராமங்களிலும் தென்னாற்காடு பகுதியின் 37 கிராமங்களில் இருந்தும் விலங்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

Read article
படிமம்:India_Puducherry_locator_map.svg